பெண் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!

சென்னை பெரம்பூர் மேல்பட்டியை அடுத்த பொன்னையன் தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான மரகதம். இவருடைய கணவர் குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருப்பதாகவும் இவர்களில் ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு அவருடைய மகனும் மாதவரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே மரகதம் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சந்திரசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் வீடு எடுத்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகர் குடித்துவிட்டு வந்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போகவே ஆத்திரமடைந்த மரகதம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் அவரை காப்பாற்ற முயன்ற போது அவருக்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனிடையே இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி மரகதம் பரிதாபமாக உயிரிழந்தார். அதோடு பலத்த தீ காயமடைந்த சந்திரசேகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *