தாய், மகள் படுகொலையில் மங்கி குல்லாவால் சிக்கிய கொலையாளி!! பின்னணி என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர் ஆண்ரோ சகாய ராய். மீன்பிடி தொழிலாளியான இவரது மனைவியின் பெயர் பவுலின் மேரி. இந்த சம்பதியினருக்கு அலன்,அரோவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆண்ரோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இளைய மகன் அருண் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி தாய் த்ரேசம்மாள் மற்றும் பவுலின் மேரி அயன் பாக்ஸால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவர்கள் அயன் பாக்ஸ் மற்றும் கைரேகைகள் தடயமாக வைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.
மேலும் ஒரு தடயமாக வீட்டின் தோட்டத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மயங்கி குல்லாவை தடயமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 15 நாட்களாக கஞ்சா கும்பலைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர்களிடம் இருந்து எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதனிடையே மங்கி குல்லாவை வாடிக்கையாக அணியும் அமலசுதனை அழைத்து விசாரணை நடத்தியதில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.