கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து-3 பேர் உயிரிழப்பு.!!
கடலூர் அருகே எம்.புதூர் என்ற கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையில் இன்று இன்று வழக்கம்போல் 5 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென ஒரு நாட்டு வெடி பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளும் வெடித்தன.
இந்நிலையில் அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பியோட முயன்றதாக தெரிகிறது. வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது நெல்லி குப்பத்தை சேர்ந்த அம்பிகா, பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த 35 வயதான சித்ரா என்ற இரண்டு பெண்களும் அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே போல் சி.என் பாளையத்தை சேர்ந்த இளைஞரும் மரணம் அடைந்தார். இந்த விபத்தில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பட்டாசு ஆலை மோகன்ராஜ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும், அழுத்தம் காரணமாகவும் உராய்வு காரணமாகவும் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.