கனமழை எதிரொலி; வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலி!

கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் புதுக்கோட்டை, வாழப்பாடி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரரை காற்றுடன் கனமழை கொட்டியதால் குளுகுளுவென சூழல் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, மாரியம்மன் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதேபோல் வெயில் நகரம் வேலூரில் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வள்ளலார், சைதாப்பேட்டை, காகித பட்டரை, தொரப்பாடி மற்றும் அரியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் அரக்கோணம் அருகே தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் குருவராகப்பேட்டை பள்ளிக்கூட மேட்டுத்தெரு பகுதியில் ஓய்வுப்பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரனின் தாயார் ஆவார். தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் மூதாட்டியை மீட்டப்போது அவரை உயிருடன் காப்பாற்ற முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் மூன்றாவது நாளாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *