ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் அதிரடி கைது…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்த 32 வயதான முத்துச்சாமி என்ற இளைஞர் இருந்ததாக தெரிகிறது. எம்பிஏ பட்டதாரியான இவர் தமது கிளைகளை தேனி, திண்டுக்கல், நாகை ஆகிய ஊர்களிலும் அடுத்தடுத்து திறந்தார். தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம்தோறும் 10 சதவீதம் வட்டி தருவதாகவும், ஒரு சதவீத வட்டியை அரசுக்கு வருமான வரியாக செலுத்துவதாக கூறினார்.
இதனை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரும் ஒருவர். தனியார் உணவக பணியாளராக இருக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளாக 11 லட்சம் முதலீடு செய்ததாகவும், உறுதி அளித்தப்படி நிறுவனம் செயல்படாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. அதில் முதல் இரண்டு மாதங்கள் மட்டும் முதலீட்டிற்கு வட்டி கொடுத்ததாகவும் பின்னர் கொரோனா முடக்கத்தை காட்டி வட்டி விகிதத்தை நிறுத்தி விட்டதாகவும், கொரோனா குறைந்தவுடன் கம்பெனியை காலிசெய்துவிட்டு கூறியிருந்தார்.
அதன் பேரில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்ட நிலையில் நிர்வாக தலைவர் முத்துச்சாமி, தேனி கிளை ஆகிய இருவர் மீதும் தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தேனி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்டவர்களிடன் 4 கோடி அளவிற்கும் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 800 நபர்களிடம் சுமார் 20 கோடி வரையில் முதலீடாக பெற்று மோசடி செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து நிறுவனத்தலைவர் முத்துசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளிகளை சிலர் போலீஸார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.