திருமணத்தில் களோபரம்… கல்யாண வீட்டில் பறந்த கம்பி, கல், கட்டை!

villupuram

திருமண வரவேற்பு விழாவில் டிஜே நடன நிகழ்ச்சி; இருவீட்டாரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு+ள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் திருமலைசாமி என்ற திருமண மண்டபம் உள்ளது. இங்கு, மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் – கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பரணிஷா ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்றிரவு நடைபெற்றது.


இதில், அரங்கேறிய டிஜே நடன நிகழ்ச்சியால் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் கம்பி, தடி மற்றும் கற்களைக் கொண்டு, பெண் வீட்டாரை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.


இதில், பெண் வீட்டைச் சேர்ந்து 4 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தொடக்கத்திலேயே விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால், போலீசார் சம்பவ இடத்துக்கு மிகவும் தாமதமாக வந்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *