சமூக சேவை பணிக்கு டாக்டர் பட்டம்: திருநங்கைக்கு குதிரை வண்டியில் ஊர்வலம்!!

சமூக சேவை பணிக்கு டாக்டர் பட்டம் பெற்ற விழுப்புரம் திருநங்கைக்கு குதிரை வண்டியில் ஊர்வலமால மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்து திருநங்கைகள் அழித்தனர்.

விழுப்புரம் மாவட்ட நாயக்கர்(திருநங்கை) விமலா சமூகசேவை பணிக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள குலோபல் ஹியூமன் பீஸ்ஸ் பல்கலைகழகம் சார்பில் டாக்டர் பட்டம் திருநங்கை விமலா விற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டம் பெற்று விழுப்புரம் வருகை தந்த திருநங்கை விமலாவிற்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் மாலை அணிவித்து குதிரை வண்டியில் அமர வைத்து மேளதாளத்துடன் நடனமாடி ஊர்வலமாக வரவேற்பளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருநங்கைகளுக்கு அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *