மேட்டூர் அணையில் காவேரி ஒழுங்காற்று குழு தலைவர்கள் ஆய்வு!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டினால் தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்துவிடும். இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் காவேரி நீர் ஒழுங்காற்று கூட்டமானது ஜூன் 22-ஆம் தே நடைப்பெற உள்ளது. அதே போல் அடுத்த நாள் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் காவேரி மேலாண்மை கூட்டம் நடைப்பெற உள்ளது.

இதன் காரணமாக இன்று மேட்டூர் அணையில் காவேரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவின் குமார் மற்றும் காவேரி மேலாண்மை குழு தலைவர் எஸ்.கே அக்பர் மேட்டூர் அணையில் ஆய்வு கொண்டுள்ளனர். இதனிடையே நீர்வளத்துறை திருச்சி மண்டல பொறியாளர் மற்றும் மேட்டூர் அணையின் செயற்பொறியாளர் ஆகியோர் ஆய்வு குழுவிற்கு விளக்கம் அளித்தனர்.

இந்த ஆய்வில் மேட்டூர் அணையின் உபரி நீர். நீர் இருப்பு, நீர் வரத்து போன்றவற்றை ஆய்வு செய்தனர். அதோடு நீர் அளவீட்டு மானி மூலம் பாசனத்திற்கு எவ்வளவு நீர் தேவை போன்றவற்றை விரிவான விளக்கத்துடன் ஆய்வு நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *