பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு… தேர்வு முடிவுகள் குறித்து அதிரடி அறிவிப்பு!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
இதனை தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 9ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்பு முடிவுகள் நண்பகல் 12 மணிக்கும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.