களைகட்டிய சிரசு திருவிழா: கெங்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

வேலூம் மாவட்டம் காட்பாடி அருகே கிராமத்து தேவதை கெங்கை அம்மனுக்கு சிரசு எடுக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். காட்பாடி அடுத்த சேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சிரசு திருவிழா நடைப்பெறுவது வழக்கம்.

அதன்படி சிறப்பு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பொங்கலிட்டு கூழ்வார்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் அம்மன் சிரசு மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அம்மன் சிரசு முக்கிய வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் கோவிலுக்கு வந்தது. வாணவேடிக்கையுடன் அம்மன் சிரசு இழக்கப்பட்டு கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவை முன்னிட்டு நாட்டுப்புற கலைஞர்களுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு வெகுவிமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு மலர் மாலை ,எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை அணிவித்து வழிப்பட்டனர்.

அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. திருவிழாவை ஒட்டி கிராமமக்கள் 60-வது எருமை மாடுகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *