எச்சரிக்கை: மீனவர்கள் இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

16.06.2022: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா, தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகள்‌, தென்தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌, குமரிக்கடல்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

17.06.2022.18.06.2022.19.06.2022: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா, கேரளா, தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தென்தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌, குமரிக்கடல்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *