கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டிகள் மோதல்! பரபரப்பு பின்னணி?
கொடைக்கானலில் வாடகை இரு சக்கர வாகனங்களை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட வந்தவர்களை உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய தளமாக அமையும் கொடைக்கானலில் பிரதான தொழிலாக சுற்றுலா தொழில் உள்ளது. இதனை வாழ்வாதாரமாக நம்பி கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த தொழில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் சுற்றுலா தொழிலாக இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் சம்பவமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் வாடகை இருசக்கர வாகனங்களை வெளியூரை சேர்ந்த நபர்கள் சிலர் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி கொடைக்கானல் கலையரங்கத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாகனங்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு வாடகைக்கு விடுவதாக தகவல் வந்தது.
இதனை கண்டித்து கொடைக்கானலில் இருக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் வாடகை சைக்கிள் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த சூழலில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.