போலீஸ் மீதான புகார் அதிகரிப்பு: ஐகோர்ட் எச்சரிக்கை!

chennai high court

காவல்துறையினர் மீது அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும் படி அனுப்பட்ட நோட்டீஸ்ஸை எதிர்த்து காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2014 ஆம் ஆண்டு இடத்தை காலி செய்ய உத்தரவிட்டு இதனை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பிறகு இந்த ஆண்டுதான் மனுதாரர் இடத்தை காலி செய்து இருப்பதாகவும் அதற்காக அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விளக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

உயர் அதிகாரிகள் ஒழுக்கத்தைப் பேணாமல் இருப்பது காவல்துறையினருக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என நீதிபதி தெரிவித்தார். காவல்துறையினர் பெயரை வாகனங்களில் தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்று கூறிய அவர் உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தவும் அவர்களின் தலைமையின் கீழ் கட்டுப்படுத்தவும் அவர்களின் தலைமைகளின் கீழ் செயல்படவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அண்மைக்காலங்களில் அதிகமாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூடிய நீதிபதி இது சீரழிவுக்கும் அரசியலமைப்பு மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *