மாணவர்களே உஷார்!! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை..
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்குப் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல்வேறு விதமாக இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடனும் மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என்றும் இதனை மீறி செல்போன் எடுத்துவந்தால் பறிமுதல் செய்வது மட்டுமில்லாமல் திருப்பி தர முடியாது என கூறியுள்ளார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்போன்கள் மூலம் மாணவர்கள் ஆன்லைனில் மூழ்கிய நிலையில் மாணவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
Good plane
𝐒𝐮𝐩𝐩𝐞𝐫…
Ada ponga da
Super sir
Really very good