பள்ளிகள் திறப்பு… அரசுக்கு பெற்றோர்கள் வைத்த அதிரடி கோரிக்கை!

School

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொரோனா பரவி வரும் சூழலில் தமிழக அரசு மாணவர் மீது கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் சரியாக இயங்கவில்லை.

வழக்கமாகவே ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் சற்று தாமதமாக திறந்து வந்த சூழலில் இந்த வருடம் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது.

பள்ளிகள் திறந்த பிறகு மாணவர், மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடி,உறுதிமொழி எடுத்து வகுப்பு அறைக்கு சென்றார்கள். தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. கோடை விடுமுறை முடிந்து பிறகு தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

ஜூன் 20-ஆம் தேதியன்று பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் ஜூன்- 27-ஆம் தேதியன்று பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப்பில் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *