தமிழகத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! எங்கு தெரியுமா?
தமிழ் நாட்டில் 4 ஆயிரம் அளவு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தனுஷ்கோடி கடலுக்குள் காற்றாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
மத்திய எரிசக்திதுறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் 4 ஆயிரம் அளவிற்கு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் 4 மாதங்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
ராமநாதப்புரம் மாவட்டம் தனுஷ்கோடியில் காற்று மின்சாரத்தை தயாரிக்க மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்ட நிலையில் தற்போது புதிய காற்றாலை அமைக்கப்படும் என தெரிகிறது. கடலுக்குள் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிப்பது ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே இதுவே முதன்முறை ஆகும்.
அதன்படி, தனுஷ்கோடியில் கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. கடல் நீருக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் காற்றாலைக்கான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த அடித்தளம் வலுவானதாக இருக்கும் வகையில் திட்டத்தில் 70% அடித்தளத்துக்கே செலவு செய்யப்பட உள்ளது. மேலும், வழக்கமாக மே 15 முதல் செப்டம்பர் 15 வரையே காற்றைலை மின்சார உற்பத்திக்கான சீசன் உருவாகும் நிலையில் கடலுக்குள் கிடைக்கும் மின்சாரங்களினால் ஆண்டுமுழுவதும் மின்சாரம் கிடைக்கும் என கருதப்படுகிறது