காவல்துறை புகார் ஆணையம்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் இறுதி அவகாசம்!
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விளக்க அளிக்க அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜிபியை உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி?? எழுப்பினார்.
புகார் ஆணையம் அமைத்த சட்டத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அதை ரத்து செய்யப்போவதாக தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தது.