கீழடி அகழாய்வில் பச்சை நிற பாசிகள் கண்டெடுப்பு!

கீழடி அகழாய்வில் தோண்டப்பட்ட குழியில் அதிக அளவு பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகமான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணமாகவே வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அரசு சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைப்பெற்று வருகிறது. தற்போது எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் இருக்கும் கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைப்பெற்று வருகிறது. இதில் கண்ணாடி பாசிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் பாசிகள், காதனிகள், சங்கு வளையல்கள் உட்பட பலபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழிகளில் பச்சை நிற பாசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். கோடை விடுமுறை என்பதால் 7-ஆம் கட்ட அகழாய்வு நடைபெறும் இடம் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே அகழாய்வு நடந்த இடங்கள் மற்றும் 2600 ஆண்டுகளுக்கு முன் தந்ததால் செய்யப்பட்ட பகடைகளையும் ஏராளமானோர் வியப்புடன் பார்த்து சென்றனர்.

மேலும், கீழடியில் இதுவரையில் நடைப்பெற்ற பொருட்களில் இது வரையில் மது ரீதியான அடையாளங்கள் மற்றும் மத சின்னங்கள் கண்டறியப்படவில்லை. செப்டம்பர் மாதத்துடன் 8-ஆம் கட்ட பணிகள் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது அகழாய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *