35 பேருக்கு தொற்று உறுதி… காஞ்சியில் தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் இன்று மூடல்!

காஞ்சிபுரம் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விடுதியை மூடவும், ஆன் மூலம் வகுப்புகள் நடத்தவும் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இதனை திரும்பபெற வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: காஞ்சிபுரம் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 35 பேருக்கு இதுவரை தொற்று உறுதி சரி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அங்கு சனிக்கிழமை முதல் விடுதி மூடப்படும் எனவும், வகுப்புகள் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும், இதனால் மாணவ மாணவிகள்வுடனே வெளியே உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் இது குறித்து சுகாதாரத்துறையிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுனம் அளித்த சுற்றறிக்கையில் உள்ள நடைமுறைகள் திரும்பபெற வேண்டும் மாணவர்களை வெளியேற்ற கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

ஜப்பான் நாட்டில், 5வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்றுவிட்டனர். ஆனால் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படாமல் உள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விடுதியை மூடவும், ஆன் மூலம் வகுப்புகள் நடத்தவும் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இதனை திரும்பபெற வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *