சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக அனைத்து கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவது, ஊக்கத்தொகை வழங்குவது போன்ற செயற்பாடுகளில் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சிறந்த ஆதிதிராவிடரைச் சேர்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என மொத்தம் 11 சிறப்பு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அதரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் எழுதிய நூல்கள் வெளியிடுவதற்கு தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பெயர், முகவரி, போன்ற விவரங்களை tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிமுகம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், விண்ணப்பங்களில் விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்களை குறிப்பிட்டு வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *