சிறுமியின் கருமுட்டை விற்பனை: தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு!!

ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பெயிண்டர் ஆக வேலை பார்த்துவரும் சையத் அலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் அந்த பெண் கருமுட்டை கருமுட்டை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கி அந்த பணத்தை தனது உல்லாச வாழ்கைக்கு பயன்படுத்தியுள்ளார்.

இந்த சூழலில் அந்தப் பெண்ணின் மகள் 13- வயதில் பூப்படைந்து உள்ளார். அப்போது அந்த பெண்ணின் கள்ளக்காதன் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டளில் ஈடுபடுவதும், பாலியல் வன்கொடுமை செய்வதும் என இருந்துள்ளார். இதற்கு அவருடைய தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. தற்போது அந்த சிறுமிக்கு 16 வயது ஆன நிலையில் இதுவரையில் 8 முறை கருமுட்டை தானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அந்த பெண்ணிற்கு சுமார் 20 முதல் 30 ஆயிரம் வரையில் பணம் கிடைத்தாகவும் இதற்கு புரோக்கராக செயல்பட்ட பெண்ணிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் வெறுத்துப்போன அந்த சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் அவர்களின் உறவினர்கள் மூலம் வெளியே தெரிவே சிறுமியின் தாய் அவருடைய கள்ளக்காதலன் சையத் அலி மற்றும் புரோக்கராக செயல்பட்ட பெண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது நடைப்பெற்று இருக்கும் சம்பவமானது புரோக்கர் மூலம் நடந்துள்ளதால் இந்த சம்பவத்தில் மற்ற சிறுமி யாராவது ஈடுப்பட்டுள்ளாரா என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *