ஷாக் நியூஸ்!! சென்னையில் பயங்கர தீ விபத்து..

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாகவே தீ விபத்து என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக பட்டாசு ஆலை தீ, விபத்து மின் கசிவால் ஏற்படும் தீ விபத்து, எலக்ட்ரிக் பைக் வெடித்து தீ விபத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

அந்த வகையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தற்போது ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் பொருட்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *