நளினி விடுதலை விவகாரம்: உயர் நீதிமன்றம் அதிரடி!!

Nalini

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு அளித்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதித்ததால் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என நளினி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் வந்தது. அப்போது அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தின் அடிப்படையில் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்ததாகவும் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமானது என்றும் மறுபடியும் நளினி மனுவை ஆளுநர் பரிசீலிக்க கூடாது என வாதிட்டார்.

அப்போது பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நளினியை உச்சநீதிமன்றம் மட்டும்தான் விடுதலை செய்ய வேண்டும் என கூறினார். அப்போது பேசிய நளினி வழக்கரிஞர் நளினியை விடுதலை செய்ய கோரவில்லை என்றும் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் அரசுக்கு மட்டும் கோரிக்கையை முன் வைத்ததாகவும் கூறினார். மேலும், விடுதலை செய்வதில் ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *