சென்னையில் பரபரப்பு; ரஷ்ய கலாச்சார மையத்தில் தீ விபத்து!

Fire

மின் கசிவு காரணமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தேனாம்பேட்டை,மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அங்கிருந்து பணியாளர் பார்த்ததால் உடனடியாக முதல் தளத்தில் இருந்த நபர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மயிலாப்பூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரஷ்ய கலாச்சார மையத்தில் பணிபுரிபவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் தீ அடுத்தடுத்து பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் புகை வந்துகொண்டிருப்பதால் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தங்கள் பணியை செய்துகொண்டுள்ளனர். இதுவரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிபிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *