அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலடி!!

கற்பினிகளுக்கு ஊட்டச்சத்து கலவை வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் டெண்டர் விட்டு இருப்பதாகவும் இது இன்னும் முடிவு செய்யாமல் இருப்பதாகவும் டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறுவது எந்த விதத்தில் நியாயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை பாஜக தலைவர் அண்ணாமலை நிரூபிக்க வேண்டும் என்றும் இதற்கு பதில் கூறவில்லை என்றால் மற்ற துறைகள் குறித்து புகார் அளிப்பது உண்மைத்தன்மை இருக்கிறதா என்பது இதில் இருந்து தெரியும் என அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் இருக்கும் பொருட்கள் ஆவின் நிறுவனத்தில் வாங்குவதாகவும் தற்போதைய டெண்டர் பணிகள் ஓப்பன் ஆகவில்லை என்றும் இதில் தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

மேலும், ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மின்சாரத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *