சிறுமியின் கரு முட்டை விற்பனை விவகாரம்: சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி!!

ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பெயிண்டர் ஆக வேலை பார்த்துவரும் சையத் அலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் அந்த பெண் கருமுட்டை கருமுட்டை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியிருக்கிறார்.

இந்த சூழலில் அந்தப் பெண்ணின் மகள் 12- வயதில் பூப்படைந்து உள்ளார். அப்போது அந்த பெண்ணின் கள்ளக்காதன் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டளில் ஈடுபடுவதும், பாலியல் வன்கொடுமை செய்வதும் என இருந்துள்ளார். இதற்கு அவருடைய தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

அதோடு மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று கருமுட்டை தானம் செய்ததாக தெரிகிறது. இதன் மூலம் அந்த பெண்ணிற்கு சுமார் 20 முதல் 30 ஆயிரம் வரையில் பணம் கிடைத்தாகவும் இதற்கு புரோக்கராக செயல்பட்ட பெண்ணிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அவர்களின் உறவினர்கள் மூலம் வெளியே தெரிவே சிறுமியின் தாய் அவருடைய கள்ளக்காதலன் சையத் அலி மற்றும் புரோக்கராக செயல்பட்ட பெண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் மருத்துவ மனைகளில் சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டது உறுதியானால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சென்னையில் 50 முதல் 70 வரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சிறுமியின் கரு முட்டை விற்பனை செய்யப்பட்டது தொர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரிக்க உள்ளதாகவும் இது உறுதி செய்யப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *