சென்னைவாசிகளே… மறந்தும் இந்த பக்கம் போயிடாதீங்க!

Traffic

இன்று காலை முதல் அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பு அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் முயற்சியாக ஏற்கனவே அண்ணாசாலை X டேம்ஸ் சாலை சந்திப்பு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டும் மற்றும் அண்ணாசாலை x திரு.வி.க சந்திப்பு ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகன ஓட்டிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அண்ணாசாலை சுமித் ரோடு சந்திப்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு 10 நாட்கள் சோதனை முயற்சியாக மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பட்டுலாஸ் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். மேலும் ஒயிட்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம். காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகமான நேரங்களில் ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் ஏற்படும் நெரிசல்களை குறைக்க கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்த உள்ளது

ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம் மற்றும் டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைய அனுமதிக்கப்படும்.

மேலும் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுலாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் ரோட்டிற்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் துணி கடை எதிரே “U” திருப்பம் செய்து ஸ்பென்சர் சந்திப்பு நோக்கி செல்லலாம்

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *