13 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளி: தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு!!

மதுரையில் கழிவுநீர் குழாய் பதிக்கும் போது மண் சரிந்ததில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சிக்கிக்கொண்டார். முன்யோசனை இன்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்க முயலும் போது தலைமட்டும் துண்டாகி மேலே எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியில் கல்வி நீர் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 1 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணியில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மூவர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுமார் 13 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மண்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் இருவர் உயிர் தப்பிய நிலையில் ஈரோட்டை சேர்ந்த சதீஷ் என்ற தொழிலாளி மண் குவியல் அடியில் சிக்கிக் கொண்டார். பொக்லைன் இயந்திரம் மூலம் மண் குவியலை அகற்றி அவரை மீட்க முயன்றபோது தலை மட்டும் துண்டிக்கப்பட்டு மண் குவியலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

இதனைக் கண்டு சதிஷின் குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து உடலை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு சதீஷின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் மண்குவியலில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாரா? அல்லது மீட்பு பணியில் ஈடுபட்ட போது தலை துண்டித்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடைபெறுகிறது. நிகழ்வு இடத்தில் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *