உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா ?

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இதனிடையே சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,775 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து சவரனுக்கு ரூ.38,560-க்கு ஆக விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,210- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,258-ஆகவும் பவுனுக்கு ரூ. 42,064 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 68.50 காசுகளாகவும் இரு கிலோ 68 ஆயிரத்து 500- ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *