பெற்ற மகளின் கருமுட்டையை தானம் செய்த கொடூர தாய்!! பின்னணி என்ன?

ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பெயிண்டர் ஆக வேலை பார்த்துவரும் சையத் அலி என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.

இந்த சூழலில் அந்தப் பெண் தனது கருமுட்டையை தானம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்காக சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணம் வந்து உள்ள நிலையில் அந்தப் பெண்ணும் சையத் அழியும் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே அந்தப் பெண்ணின் மகள் 12- வயதில் பூப்படைந்து உள்ளார்.

அதன் பிறகு ஒரு வருடம் காத்திருந்த அந்தப் பெண் தனது கள்ளக்காதலன் சையத் அலியை வைத்து அச்சிறுமியிடம் அத்துமீற செய்துள்ளார். அந்த சிறுமிக்கு கருமுட்டை உருவாகவே உடனே அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருமுட்டை தானம் செய்துள்ளார்.

சிறுமி என்றால் கருமுட்டை தானத்திற்கு மறுப்பார்கள் என்பதால் போலியான ஆவணங்களை உருவாக்கியிருக்கிறார் அப்பெண். இதற்காக மாலதி என்ற பெண்ணும் இடைத்தரகராக இருந்துள்ளார். குறிப்பாக சிறுமியின் வயது, பெயர், புகைப்படம் என எல்லாவற்றையும் மாற்றி புதிதாக போலி ஆதார் கார்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.

ஒருமுறை கருமுட்டை தானம் செய்ய 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைத்துள்ளது. தரகராக செயல்பட்ட மாலதிக்கு ஐந்தாயிரம் ரூபாய் தரப்பட்டது. ஒவ்வொரு முறையும் தனது கள்ளக்காதலன் மகளிடம் அத்துமீற தாயும் அதற்கு உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறுமிக்கு 16 வயது ஆகும் நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எட்டு முறை கருமுட்டை தானம் செய்துள்ளார். நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி அத்தனை கொடூர சம்மதத்தையும் அரங்கேற்றி பணம் சம்பாதித்துள்ளனர் சையத் அலி மற்றும் சிறுமியின் தாய்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துப் போக முடியாத சிறுமி கடந்த மாதம் 20ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். சிறுமி இருக்கும் இடத்தை அறிந்த சையத் அலி மற்றும் அவருடைய தாய் கருமுட்டை தானம் செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியை அழைத்து விசாரிக்கும்போது நடந்த அத்தனை பயங்கர சம்பவம் வெளியில் வந்துள்ளது. இதன் பேரில் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசாரிடம் தனக்கு நடந்த கொடூரத்தை சொல்லி கதறி உள்ளார் அந்த சிறுமி. மேலும், அவர்களிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *