ஜொலி, ஜொலிக்கும் புதிய ரிப்பன் கட்டிடம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பு!
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை முதலமைச்சர்
மு க ஸ்டாலின் பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.
மேலும் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு வருட சென்னை மாநகராட்சியின் சாதனை விளக்க புத்தகத்தையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ,மேயர், துணை மேயர் மற்றும் சென்னை மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
” மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டிடத்தில் வண்ண விளக்குகளால் சிறப்பாக தொடங்கி வைக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதுபோல கட்டிடங்கள் எல்லாம் நான் பள்ளிக்கூடத்தில் மாணவராக இருந்தபோது பள்ளியிலிருந்து என்னை அழைத்து சென்றார்கள் .
இப்போது எனக்கு திறந்து வைக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். 1986 ல் மூத்த அமைச்சர்கள் என்னை அமைச்சராக்கும் படி கலைஞரிடம் சொன்ன போது அதை அவர் செய்யவில்லை. அதன் பின், மேயர் ஆக்கி உன்னை இவ்வளவு பெரிய கட்டிடத்தில் அமர வைத்து இருக்கிறேன் என்று கலைஞர் கூறினார்.
நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த மாநகராட்சி தேர்தலை நடத்தி அதில் நாம் வெற்றியும் பெற்றோம். அதற்காக அழைப்பிதழின் பின்புறம் ரிப்பன் கட்டிடம் தான் இடம் பெற்றுள்ளது. நான் அடிக்கடி இந்த கட்டிடம் வழியாக செல்லும் போது கலைஞர் சொன்னது தான் நியாபகம் வரும்.” என்றார்.