குட்கா ரெய்டு நடத்துவதாகக் கூறி கொள்ளை: போலீசார் வலைவீச்சு!!
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போதை பொருள் தடுப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் திலகம். இவரது மகன் கவியரசன் கடை வியாபாரத்தை கவனித்து வருகிறார்.
கடையின் எதிரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் நண்பகலில் திலகம் வெளியில் சென்றிருந்த நிலையில் கவியரசன் மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் 4 பேர் வந்து தாங்கள் போதைப் பிரிவு தடுப்பு போலீசார் எனவும் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளதாகவும் இதனால் சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
காரில் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் மூன்று பேர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். கடையில் குட்கா பொருட்கள் ஏதும் கிடைக்காத நிலையில் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கவியரசன் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.
வீட்டில் ஏதும் கிடைக்காததால் அது என்னை காரில் அழைத்துச் சென்று சிறிது தூரம் கழித்து இறக்கி விட்டனர். இந்த சம்பவம் குறித்து வீட்டிற்கு வந்த தாயிடம் கூறியுள்ளார். இதனிடையே காரில் வந்தவர்களை சந்தேகம் அடைந்த கவியரசன் வீட்டில் பணம் வைத்திருந்த பையை திறந்து பார்த்து உள்ளார்.
அப்போது பையில் இருந்த ஐந்து சவரன் நகை மற்றும் 75 ரூபாய் ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது. போலீஸ் என கூறி ரெய்டு நடத்த வந்தவர்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்தே காவல்துறையில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.