கோயில் திருவிழாக்களில் ஆடல் , பாடல் கலை நிகழ்ச்சிக்கு தடை: கோர்ட் உத்தரவு!!

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் ஆடல் , பாடல் கலை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் தொடங்கி இருப்பதால் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென குறிப்பாக திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கிராமங்களில் கோயில் திருவிழா தற்போது நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பாக கோடைக்காலங்களில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அனைத்து மனுக்களும் நீதிபதி தாரணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் திருவிழாக்களில் ஆடல் , பாடல் கலை நிகழ்ச்சிக்கு தடை என கூறி நீதிபது உத்தரவிட்டு இருந்தார்.

அதே போல் கடந்த வாரங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கோயில் திருவிழாக்களில் ஆடல் , பாடல் கலை நிகழ்ச்சிக்கு தடை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் களைகட்டி உள்ளதால் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *