பிரமிக்க வைக்கும் கீழடி: கலைநயம் மிக்க உறைகிணறு கண்டெடுப்பு !!
கீழடியில் நடைப்பெற்றுவரும் எட்டாம் கட்ட அகழாய்வில் பானையுடன் கூடிய கலை பெற்ற உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இரண்டாவதாக தோண்டப்பட்ட குழியில் 3 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. இதுவரையில் மட்டும் 15 உறைக்கிணறுகள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிகப்பட்சமாக 28 அடுக்குகள் கொண்ட உறைக்கிணறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள உறைக்கிணறுகள் அனைத்தும் 23 செ.மீ 83 செ.மீ விட்டமும் கொண்டவையாக இருந்தது. முதன் முதலாக அகரத்தில் தற்போது 40 செ.மீ உயரமும் 63 செ.மீ விட்டமும் கொண்ட உறைக்கிணறு வெளிப்பட்டுள்ளது. இதுவரையில் உறைகிணறு பக்கவாட்டில் கயிறு போன்ற வடிவங்கள் தென்பட்டு உள்ள நிலையில் தற்போது உறைகிணற்றின் மேற்புறம் கலைநயத்துடன் காணப்பட்டுள்ள ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உறை கிணற்றில் மூன்று அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் மேலும் சில அடுக்குகள் இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், பண்டைய காலத்திலேயே கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் கலைநயத்துடன் தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற உறை கிணறுகள் முக்கிய ஆதாரமாக கிடைத்து குறிப்பிடத்தக்கது.