மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பீதியில் பொதுமக்கள் !!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வந்த நிலையில் இந்த வைரஸால் பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரையும் காவு வாங்கியது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டுவந்தது.

இதனிடையே படிப்படியாக தற்போது வைரஸின் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் சென்னை, செங்கல்பட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தினசரி பாதிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 100-யை நெருங்கி இருக்கிறது. இதனால் தொற்று மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறு அனைத்து மாவட்டங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

பொதுஇடங்களில் முக கவசம் தனிமனித இடைவெளிகளை பின்பற்றுவது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களை கண்டறிந்து வரும் 12-ஆம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்க வைக்குமாறு சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *