ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு !!

DPI

ஆதி திராவிடர் மாணவர் சேர்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆதி திராவிடர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார் தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான அரசு பள்ளிகளில்
ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கை என்பது 20 சதவீதத்துக்கு மேல் இருப்பதாக தனது சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் 18 சதவீதத்துக்கும் குறைவாகவே ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆயிரம் பள்ளிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருப்பதாக பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆதி திராவிடர் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *