தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு…. மின்சார வாரியத்தில் வேலை கேட்டு போராட்டம்!

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் நடத்தப்படும் மின்வாரிய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற முடித்த தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தவர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக அரசு திறன் மேம்பாட்டு துறையின் கீழ் மின்வாரியத்தில் பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின் வாரியத்தில் பயிற்சி முடித்தோர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார்,தமிழக அரசின் கீழ் செயல்படும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பாக நடத்தப்படும் மின் வாரியத்தில் பயிற்சி முடித்து உள்ளதாக தெரிவித்த அவர்,

தேர்தல் அறிக்கையின் போது திறன் மேம்பாட்டு துறையின் கீழ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி விடுவோம் என திமுக தெரிவித்தது.

ஆனால் தற்போது அதனை செயல்படுத்த மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.முறையாக பயிற்சி முடித்த தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை அரசு வழங்கிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *