பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நற்செய்தி… அமைச்சர் பொன்முடி அதிரடி!
வரும் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வி க்கான மாணவர் சேர்கை ஜூலை 1முதல் தொடங்கப்படுகிறது,
13 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் 10 புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்றார் மேலும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கும் ஆளுநர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியிலேயே ஒரு அரசாங்கமே வெளியிட்டிருக்கிறோம் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்
புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் உள்ளது. தமிழ்நாடு கல்வி கொள்கை அனைத்தும் சரியாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்துள்ளார் . தமிழகத்திலேயே இருக்கின்ற ஆரம்ப கல்வி, உயர்கல்விகளில் மாற்றங்களைஅமைத்து வளர்ச்சி நிலை உருவாக்குவோம். தமிழகத்தைப் பொருத்தவரை புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வருவதற்கு அவசியமில்லை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழக முதலமைச்சர் தெளிவாக அறிவித்து இருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வருவதற்கு அவசியம் இல்லை அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை முதலமைச்சராக தெளிவாக தெரிவித்திருக்கிறார்- பொறியியல் கலாந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றார் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்- எனவும் AICET யின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். புதிய கல்விக்கொள்கையை அதிதீவிரமாக எதிர்க்கிறோம் என்றார் .