சென்னை மெட்ரோ இரயில் புதிய வழித்தட வரைபடம் வெளியீடு!

CHENNAI METRO

சென்னையில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும் 5 வழித் தடங்களின் முழுமையான வரைபடைத்தினை சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 2015-ம் ஆண்டு ஆலந்தூர்-கோயம்பேடு இடையே மெட்ரோ இரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை மெட்ரோ இரயில் சேவை தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ இரயில்களில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், 2-ம் கட்டமாக 61,843 கோடி ரூபாய் மதிப்பில் 3 வழித் தடங்களில் 118.9 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ இரயில் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்தது. இப்பணிகள் நிறைவடைந்தால் மொத்தமாக 5 வழித்தடங்களில் 173 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில், 5 வழித் தடங்களின் முழு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ புதிய வழித்தடங்கள்

இந்த இருவழிப் பாதையை இணைக்கும் இரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்கள் இருக்கின்றன. மேலும், இந்த இருவழி தடத்திலும் 40 இரயில் நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதியதாக 3-வது வழித்தடமாக மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வாயிலும், 4-வது வழித்தடமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், 5-வது வழித்தடமாக பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும் மெட்ரோ இரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித் தடத்தில் 50 ரயில் நிலையங்களும், மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தடத்தில் 42 ரயில் நிலையங்களும், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே 30 இரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *