மீனவ பெண் படுகொலை: வடமாநில இளைஞர்களின் கொடூர செயல் !!

ராமேஸ்வரம் அருகே உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கடந்த 24-ஆம் தேதி கடல்பாசி சேகரிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். அப்போது மாலை நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடி சென்ற போது அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்து உடலை எரித்துள்ளனர்.

பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த உறவினர்கள் அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் பண்ணையில் பணியாற்றும் ஒடிசா இளைஞர்கள் தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இறால் பண்ணையை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனிடையே இரண்டு நாட்களாக விசாரித்த நிலையில் அதில் பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த தங்கம் வெள்ளி போன்ற நகைகளையும் எடுத்து அடகு கடைகளில் விற்க முற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்களை கைது செய்த போலீசார் வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்கள் என விசாரித்து வருகின்றனர். மற்ற 4 இளைஞர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.