பள்ளிகள் திறப்பது எப்போது..? இன்று வெளியாகிறது அதிரடி அப்டேட்!!
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வந்த நிலையில் இந்த வைரஸ்சால் பலகோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரையும் காவு வாங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே கொரோனா தாக்கம் படிபடியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த சூழலில் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்ததால் நடப்பாண்டிலும் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் அதற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. இதனிடையே மே முதல் வாரத்தில் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி வரும் நாட்களில் இவர்களுக்கு தேர்வுகள் முடிவடையவுள்ளது.
அதோடு 1 முதல் 9- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த வாரம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு அடுத்தமாதம் 17-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இருப்பினும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்ற காரணங்களினால் அடுத்த மாதம் 20 அல்லது 27-ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த சூழலில் வரும் கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளிகள் துவங்குவது எப்போது காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை விவரம் மற்றும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை உட்பட அனைத்து விபரங்களையும் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.