எப்போது பள்ளிகள் திறப்பு? வெளியானது அதிரடி அப்டேட்..!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்தாண்டும் பொதுத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் அதற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. இதனிடையே மே முதல் வாரத்தில் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி வரும் நாட்களில் இவர்களுக்கு தேர்வுகள் முடிவடையவுள்ளது.

இந்த சூழலில் கடந்த வாரம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த வாரம் கோடை விடுமுறை அழிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் இறுதியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம், விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்ற காரணங்களினால் அடுத்த மாதம் 20 அல்லது 27-ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பள்ளி கல்வித் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும், 1 முதல் 10ஆம் வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி முதல் திறக்கவும், உயர் வகுப்புகளை ஜூன் 20-ஆம் தேதி முதல் 27ம் தேதி திறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *