திருவிழாக்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிக்குத் தடை!!

கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசமான வார்த்தைகள் மற்றும் நடனங்கள் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 30- க்கும் அதிகமான மனுக்கள் விடுமுறை காலங்களில் மதுரை கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். குறிப்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும் போது சட்டம், ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்றும் எந்த பிரச்சனையும் வராது என்றும் மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டுமென நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தவோ ஆபாசமான நடனங்களை ஆடக்கூடாது என உத்தரவிட்டார். நிபந்தனைகள் மீறி ஆபாசமான வார்த்தைகள் மற்றும் ஆபாசமான நடனங்கள் இருந்தால் காவல்துறையினர் உடனடியாக நிகழ்ச்சியினை நிறுத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்குகளை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *