திண்டுக்கல்: விமரிசையாக நடைபெற்ற மாதா கோவில் திருவிழா !

மாதா

திண்டுக்கல் அருகே புனித சலேத் மாதா கோவில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு சப்பரத்தை சுற்றிவந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழாவில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மறவப்பட்டி கிராமத்தில் 130 ஆண்டுகள் பழமையான புனித சலேத் மாதா தேவாலயம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடத்தப்படாத நிலையில் கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் 137-வது ஆண்டு திருவிழா தொடங்கி நேற்று இரவு திருப்பணி நடைபெற்றது.

இதனிடையே திருவிழாவின் முக்கிய நிகழ்வான பகல் புனித சலேத் மாதாவின் பகல் புனித பெரிய சப்பர பவனி நடைபெற்றது. தொடர்ந்து பவனி முடிவடைந்ததும் தேவாலயம் முன் சப்பரம் திருப்பப்பட்டது. அப்போது தாங்கள் வேண்டிய காரியங்களை நிறைவேற்றி தந்த மாதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு சப்பரத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர்.

இந்நிலையில் சிலர் சப்பரத்தை சுற்றி வந்து அங்கப்பிரதட்சணம் செய்தனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட மாதா திருவிழா தற்போது நடைபெற்றதால் திரளான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், புனித சலேத் மாதாவிடம் வேண்டியது நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *