நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ?
தமிழகத்தில் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் தொடங்கினாலே அனைத்து ஊர்களிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக வைகாசி மாதங்களில் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் காலங்காலமாக வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருவிழாவில் பலர் நேர்த்திக் கடனை செலுத்துவது, தீ மிதித்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் மற்றும் திருவிழாவின் முக்கிய சிறப்பம்சமாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக திருவிழாவில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இம்மாதிரியான விடுமுறைகளை அம்மாவட்ட ஆட்சியர்கள் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா நடைபெற உள்ளது. இதனை
முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.