வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… காவல்துறை எச்சரிக்கை!

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களும் தலைகவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்த நிலையில் இன்றைய தினமே தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துவருகின்றனர்.

சென்னையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களில் செல்லும் பின்னிருக்கை நபர் தலைகவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வருகின்றனர். வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடை பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும். திங்கள் கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் நபரும் தலைகவசம் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

சென்னை சேப்பாக்கம் சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர்

இதில் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் தலைகவசம் அணியாதவர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசுலீத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *