மீனவர்கள் போராட்டம்! களத்தில் குவிந்த போலீசார்: பின்னணி என்ன?
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள எல்என்டி கப்பல் கட்டும் தளம் துறைமுகம் சாலையில் அமர்ந்து பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு பழவேற்காடு பகுதியை சேர்ந்த 1570 மீனவர்களுக்கு பணி வழங்குவதாக அப்போது இருந்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நிறுவனத்திற்கு சொந்தமானவர்களுக்கு மட்டுமே பணி வழங்கியதாகவும் மீதமுள்ள 1500 நபர்களுக்கு பணி வழங்காமல் இருந்தாக தெரிகிறது.
இதனால் பழவேற்காடு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அதன் ஒருபகுதியாக இன்று எல்என்டி கப்பல் கட்டும் தளம் அருகே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதாவது ஏற்கனவே பணி வழங்கி இருக்கக்கூடிய 250 பேருக்கு அந்த பணியை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் மீதமுள்ள 1500 நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தற்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இதுபோன்ற ஒரு போராட்டம் நடைபெற்ற நிலையில் அப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் இதற்கு முடிவு கொண்டுவரப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். மேலும் இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.