தமிழகமே பரபரப்பு..! 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் ?
தமிழகத்தில் அங்கீகாரம் பெற 10 அண்ணா பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்றும் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் தனியார் கல்லூரிகள் என கூறும்போது 494 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் வரக்கூடிய கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த நாங்கள் விரும்பவில்லை என அண்ணா பல்கலைகழகத்திற்கு 10 கல்லூரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
தனியார் கல்லூரிகளை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைகழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும். குறிப்பாக மாணவர் சேர்க்கைக்கு முன்னதாகவே இந்த பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, அனைத்து பெரும்பாலான கல்லூரிகள் விண்ணப்பித்து இருந்த நிலையில் 10 கல்லூரிகள் விண்ணப்பம் செய்யவில்லை.
எனவே 10 கல்லூரிகளும் வரும் ஆண்டில் மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படித்து கொண்டு வரும் மாணவர்கள் நான்காம் ஆண்டு முடிக்கும்வரை கல்லூரிகள் இயங்கி வந்தாலும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டில் நடைபெறாது என்றும் ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் படிப்பை முடித்ததும் கல்லூரிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பின்மை போன்ற பல காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பிற்கான மாணவர்களின் நாட்டம் குறைந்து வருகிறது. இதனால் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் கடந்த ஆண்டில் 20 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.