இன்று நடக்கும் குரூப் 2, 2ஏ தேர்வு: இது கட்டாயம் !!
தமிழகத்தில் குரூப் 2, 2ஏ பிரிவுகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரையில் தேர்வு நடைபெறும்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் 4,012 மையங்களில் 11,78,175 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் 8.30 மணி முதல் 8.59 மணி வரை தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி கிடையாது.
தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் வாழ்நாள் தடை விதிப்பதோடு குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகள் தேர்வர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தற்போது தொடங்கி இருப்பதால் இன்றைய தினத்தில் அதிக தேர்வர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.