திருமணமான 6 மாதத்தில் மருத்துவ மாணவி தற்கொலை !!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் 30 வயதான அபிஷேக்.. கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி 27 வயதான மருத்துவர் ராசி. இருவருக்கும் 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

கடந்த 2020- ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பு முடித்த ராசி முதுநிலை நீட் தேர்வுக்காக தயாராகிவந்துள்ளார். திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று படித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது தாய் நடத்தும் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.

நாளை தேர்வு நடைபெறும் நிலையில் நேற்று இரவு மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தேர்வுக்காக படித்துக் கொண்டு வந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால் ராசியின் தாயாரான மருத்துவர் செந்தாமரை கால் செய்துள்ளார். காலை எடுக்காததால் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்ததால் கதவை தட்டி அழைத்துள்ளார்.

மகளிடம் எவ்வித பதில் இல்லாததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ராசி மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கி தொங்கிகொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் ராசியை இறக்கிவிட்டு சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் ஆசையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் முதுநிலை படிப்பை தொடர தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவர் வந்து பார்த்துவிட்டு சென்றதாக தெரிகிறது. நாளை தேர்வு நடைபெறும் நிலையில் திடீரென தற்கொலை முயற்ச்சி எடுத்ததால் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரித்துக்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகுவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இளம்பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *